ரீசார்ஜ் பிளான்களின் விலையை உயர்த்திய ஏர்டெல்... என்ன மாற்றம்? - முழு விவரம்

Airtel Recharge Plan Price Hike: ஏர்டெல் நிறுவனம் அதன் இரண்டு பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை தற்போது உயர்த்தி உள்ளது. அந்த பிளான்கள் என்ன, அதன் நன்மைகள் என்பதை இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 11, 2024, 05:03 PM IST
  • 5ஜி இணைய சேவையை ஏர்டெல் வரம்பற்ற அளவில் வழங்கி வருகிறது.
  • Data Addon பிளானை ரீசார்ஜ் செய்ய அடிப்படை பிளான் வேண்டும்.
  • அடிப்படை பிளானின் வேலிடிட்டிதான் Data Addon பிளானின் வேலிடிட்டி ஆகும்.
ரீசார்ஜ் பிளான்களின் விலையை உயர்த்திய ஏர்டெல்... என்ன மாற்றம்? - முழு விவரம் title=

Airtel Prepaid Recharge Plan Price Hike: தற்போதைய நவீன காலகட்டத்தில் உணவு, இருப்பிடும், துணிகளை தாண்டி ஒரு தனிநபருக்கு மட்டும் மாதம் பல வகையில் செலவுகள் இருக்கும். குறிப்பாக, மின்சார கட்டணம், பெட்ரோல் செலவு, வீட்டு ஃவைஃபை கட்டணம், மொபைல் ரீசார்ஜ் செலவு என ஒவ்வொருவருக்கும் இந்த செலவு பட்டியல் மாறுபடும் எனலாம். ஆனால் இதில் மொபைல் ரீசார்ஜ் என்பது மாதம் ஒருமுறையோ அல்லது இரண்டு மாதங்கள், மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ செலவு செய்ய வேண்டி வரும். 

இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறையில் முன்னணியில் இருக்கின்றன. இந்நிறுவனங்கள் ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்ற வகையிலும், கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் இளைஞர்கள், வயதானவர்கள் என வெவ்வேறு வாடிக்கையாளர்களின் தேவைகளின் அடிப்படையிலும் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வைத்திருக்கின்றன. 

முன்னபெல்லாம், வாய்ஸ் காலுக்கு ஒரு ரீசார்ஜ், டேட்டாவுக்கு தனி ரீசார்ஜ், எஸ்எம்எஸ் சேவைக்கு பூஸ்டர் ரீசார்ஜ் என தனித்தனியாக செலவு செய்ய வேண்டியிருந்தது. அதன்பின், 3ஜி மற்றும் 4ஜி தொழில்நுட்ப வளர்ச்சியை அடுத்து டேட்டாவை மட்டும் முதன்மையாக வைத்து நிறுவனங்கள் செயல்பட தொடங்கின. குறிப்பாக, ஜியோ நிறுவனம் முதலில் வாய்ஸ் காலிங்கை வரம்பற்ற வகையிலும், தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசம் என்ற சேவையையும் கொண்டு வந்தது. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் வளர்ந்துவிட்ட சூழலில் இதன் தேவைகள் குறைந்துவிட்டது நாம் குறிப்பிட்டாக வேண்டும்.

மேலும் படிக்க | ரீசார்ஜ் பண்ண போறீங்களா? 100 ரூபாய்க்கும் குறைவான சிறந்த ரீசார்ஜ் பிளான்கள் இதுதான்

ஜியோவின் அசுர வளர்ச்சி ஏர்டெல் நிறுவனத்தையும் அதே பாதையில் பயணிக்க வைத்தது எனலாம். தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளவும், சந்தையில் தொடர்ந்து முன்னணியில் நீடிக்கவும் ஏர்டெல் நிறுவனம் ஜியோ உடன் போட்டிப்போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற ரீசார்ஜ் திட்டம் உள்ளிட்ட பல சேவைகளை வழங்கி வந்தது. பிரீபெய்ட் மட்டுமின்றி போஸ்ட்பெய்ட், வயர்லெஸ் பிராட்பேண்ட் போன்ற சேவையிலும் ஏர்டெல் தற்போது முன்னணி வகித்து வருகிறது. 

அந்த வகையில், ஏர்டெல் நிறுவனம் சில சமயம் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை ஏற்றி இறக்குவதும் வழக்கும். இந்நிலையிவ், இரண்டு பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை ஏர்டெல் நிறுவனம் சத்தமின்றி அதிகரித்துள்ளது. இந்த பிளானை பயன்படுத்தி வருபவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றாலும் அடுத்த இந்த பிளான்களை ரீசார்ஜ் செய்ய முனையும்போதுதான் விலை ஏறியிருப்பது அவர்களுக்கு தெரியும்.  zeenews.india.com/tamil/technology/jio-vs-airtel-recharge-plan-comparison-best-recharge-plans-with-rs-395-plan-84-days-validity-492550

ஏர்டெல் நிறுவனத்தின் இரண்டு வவுச்சர் ரீசார்ஜ் திட்டங்களில் விலை உயர்ந்துள்ளது. அதாவது, 118 ரூபாயில் இருந்த ரீசார்ஜ் திட்டம் 129 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 11 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 289 ரூபாயில் இருந்த ரீசார்ஜ் திட்டம் தற்போது 329 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, இந்த பிளானில் 40 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.  இந்த விலை ஏற்றம் ஏர்டெல் செயலியின் மூலம் தெரியவந்துள்ளது. 

ஏர்டெல் 329 ரூபாய் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தில் 289 ரூபாயாக இருந்த இந்த பிளான் 40 ரூபாய் உயர்த்தப்பட்டு 329 ரூபாயாகி உளஅளது. இந்த பிளானின் வேலிட்டி 35 நாள்கள் ஆகும். இந்த பிளானில் பயனர்கள் வரம்பற்ற வாய்ஸ் காலிங், 300 எஸ்எம்எஸ் மற்றும் மொத்தமாக 4ஜிபி டேட்டாவை பெறுவார்கள்.

ஏர்டெல் 129 ரூபாய் திட்டம்

முன்னர், 118 ரூபாய்க்கு விற்பனையான இந்த ரீசார்ஜ் திட்டம் தற்போது 11 ரூபாய் உயர்ந்து 129 ரூபாயாகி உள்ளது. இந்த திட்டம் Data Add-on Voucher ஆகும். அதாவது அடிப்படை ரீசார்ஜ் திட்டத்தின் டேட்டா லிமிட் முடியும்போது கூடுதல் டேட்டாவுக்காக இந்த பிளானை ரீசார்ஜ் செய்து கொள்வார்கள். இந்த பிளானை பயன்படுத்த அடிப்படை பிளான் அவசியமாகும். இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 12ஜிபி டேட்டா கிடைக்கும். முன்னர் இந்த திட்டத்தின் கீழ் 9.83 ரூபாய்க்கு ஒரு ஜிபி டேட்டா கிடைத்த நிலையில், தற்போது 10.75 ரூபாய்க்கு கிடைப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | பிஎஸ்என்எல் பயனர்களுக்கு அதிர்ச்சி... இனி வரம்பற்ற டேட்டா கிடையாது - இந்த பிளானில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News