இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் பிராண்ட் என்ன தெரியுமா?

Highest Selling Smartphone Brand: இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் பிராண்ட் மற்றும் அதன் சந்தை பங்கு உள்ளிட்ட விவரங்களை இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Oct 30, 2023, 02:58 PM IST
  • சீன நிறுவனங்களின் ஆதிக்கம் குறைந்துள்ளதாக தகவல்.
  • இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
  • இந்திய நிறுவனங்கள் வலிமையாக காலூன்ற தொடங்கிவிட்டன.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் பிராண்ட் என்ன தெரியுமா? title=

Highest Selling Smartphone Brand: சீன தயாரிப்பு ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் இந்திய சந்தையில் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது எனலாம். அதாவது ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது. 2023ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில், சாம்சங் மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களின் விற்பனை சீன தயாரிப்பு ஸ்மார்ட்போன்களை விட அதிகமாகியுள்ளதாக வெளியாகி உள்ள தகவல்கள் இதனை உறுதிப்படுத்துகிறது. 

ஸ்மார்ட்போன் சந்தையை பொறுத்தவரை, சாம்சங் மற்றும் ஆப்பிள் ஆகிய இந்த இரண்டு ஸ்மார்ட்போன் பிராண்டுகளிந் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றது எனலாம். சீன தயாரிப்பு ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் விற்பனை தொடர்ந்து குறைந்து வருகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் விற்பனை குறைவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று, சீனாவின் செயலிகளுக்கு இந்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு விதித்த தடைதான். இதுதான் சீன ஸ்மார்ட்போன்களின் விற்பனையையும் பாதித்துள்ளது. இதுமட்டுமின்றி இந்திய தயாரிப்புகளும் ஸ்மார்ட்போன் சந்தையில் காலூன்றி வருகின்றன. அதாவது, இந்திய ஸ்மார்ட்போன் பிராண்டுகளும் இந்தியாவில் அதிக விற்பனையாகி வருகின்றன. இந்திய தயாரிப்பு ஸ்மார்ட்போன்களின் விலை என்பது சீன தயாரிப்பு ஸ்மார்ட்போன்களை விட குறைவாக உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஜியோவின் ஜாக்பாட் விற்பனை... வெறும் ரூ.2,600 விலையில் 4ஜி மொபைல் - முழு விவரம்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சாம்சங் என்பது இளைஞர்கள் முதல் முதியவர் வரை அதன் எளிமையான செயல்பாடு மற்றும் பயனர் இடைமுக வடிவமைப்பு (User Interface) மூலம் ஈர்க்கப்படுகின்றனர. ஸ்மார்ட்போன் சந்தையில் 2023ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சாம்சங் 19.7 சதவீத பங்கை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

இருப்பினும், கடந்த ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் சாம்சங்கின் சந்தைப் பங்கு 8.4 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக ஆப்பிள் நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆப்பிள் 17.7 சதவீதம் சந்தைப் பங்கை அடைந்துள்ளது. இதுவரையிலான அதன் அதிகபட்ச சந்தைப் பங்கும் இதுதான். ஆப்பிள் நிறுவனத்தின் சந்தைப் பங்கு கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

சாம்சங் மற்றும் ஆப்பிளை அடுத்து, Xiaomi மூன்றாவது இடத்தில் உள்ளது, அதன் சந்தை பங்கு 13.7 சதவீதமாக உள்ளது. ஆகும். கடந்த ஒரு வருடத்தில் Xiaomi தனது சந்தைப் பங்கை 2.4 சதவீதம் அதிகரித்துள்ளது. Oppo நிறுவனம் இதில் நான்காவது இடத்தில் உள்ளது, அதன் சந்தை பங்கு 8.9 சதவீதம் ஆகும். 

Oppo நிறுவனத்தின் சந்தைப் பங்கு ஆண்டு அடிப்படையில் 6.5 சதவீதம் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இநத் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் Transsion உள்ளது. அதன் சந்தை பங்கு 8.6 சதவீதமாக உள்ளது. Transsion நிறுவனத்தின்ன் ஸ்மார்ட்போன் பிராண்டுகள் Tecno, Infinix மற்றும் itel ஆகும். Transsion நிறுவனத்தின் சந்தைப் பங்கு ஆண்டு அடிப்படையில் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. Transsion நிறுவனமும் சீனாவை தலைமையிடமாகக் கொண்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ஒரு லட்சம் ரூபாய் விலையில் ஒன்பிளஸ் மொபைல்...! அப்படி என்ன இருக்குனு கேக்றீங்களா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News