காங்கிரசை குஜராத் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாவ்நகர் மாவட்டம் பாலிதானா நகரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய மோடி, குஜராத் மக்கள் காங்கிரஸை நிராகரித்துள்ளனர் என்றும், ஏனெனில் காங்கிரசின் கொள்கையால் இந்த மாநிலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

குஜராத் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு காங்கிரஸ் ‘பிரித்து ஆளும்’ உத்தியை தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

Trending News