இந்த கம்பெனியின் ஷாம்புவை பயன்படுத்துகிறீர்களா? புற்றுநோய் ஏற்படும் அபாயம்!

யுனிலீவர் நிறுவனம் தானாகவே முன்வந்து நிறுவனத்தால் விற்கப்படும் 19 பிரபலமான உலர் ஷாம்புக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Oct 26, 2022, 12:06 PM IST
  • யூனிலிவரின் ஷாம்புகள் இந்தியா உட்பட பல நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளன.
  • நெக்ஸஸ், சுவேவ் மற்றும் டிகி போன்ற தயாரிப்புகளை நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது.
  • புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதால் திரும்ப பெற்றுள்ளது.
இந்த கம்பெனியின் ஷாம்புவை பயன்படுத்துகிறீர்களா? புற்றுநோய் ஏற்படும் அபாயம்! title=

யூனிலிவரின் ஷாம்புகள் இந்தியா உட்பட பல நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளன, பலரும் இந்த பிராண்டட் ஷாம்புகளை விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது.  யுனிலிவரின் டவ் மற்றும் ட்ரெசெம்மி உள்ளிட்ட ஏரோசல் உலர் ஷாம்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் பென்சீன் என்ற வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து  அமெரிக்காவின் யுனிலிவர் பிஎல்சி நிறுவனம் இதனை திரும்பப் பெற்றுள்ளது.  இதுதவிர இதுவரை தயாரிக்கப்பட்ட நெக்ஸஸ், சுவேவ் மற்றும் டிகி போன்ற தயாரிப்புகளையும் நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது, இவை ராக்காஹோலிக் மற்றும் பெட் ஹெட் உலர் ஷாம்புகளை உருவாக்குகிறது.  யுனிலீவர் நிறுவனம் தானாகவே முன்வந்து நிறுவனத்தால் விற்கப்படும் 19 பிரபலமான உலர் ஷாம்புக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. 

மேலும் படிக்க | தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படும்! இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா?

பென்சீன் மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது, இதுதவிர இது லுகேமியா மற்றும் இரத்த புற்றுநோய்கள் உள்ளிட்ட புற்றுநோய்களை ஏற்படுத்தும்.  2021ம் ஆண்டுக்கு முன் வரை தயாரிக்கப்பட்ட பொருட்களை தான் யூனிலீவர் நிறுவனம் திரும்ப பெற்றிருக்கிறது, மேலும் நிறுவனம் அந்த பொருட்களை விற்பனைக்கு வைக்க வேண்டாமென சில்லறை விற்பனையார்களிடம் தெரிவித்துள்ளது.  ஏரோசல் கேன்களில் பயன்படுத்தப்படும் ப்ரொப்பல்லன்ட்தான் பென்சீனின் அதிக அளவுகளுக்கு காரணமாக இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

உலர் ஷாம்புகளில் உள்ள பென்சீனை தினசரி பயன்படுத்தும்போது பல மோசமான உடல்நல விளைவுகள் ஏற்படும்.  டவ் ட்ரை ஷாம்பு வால்யூம் மற்றும் டல்னஸ், டவ் ட்ரை ஷாம்பு வால்யூம் மற்றும் டல்னஸ், டவ் ட்ரை ஷாம்பூ ஃப்ரெஷ் தேங்காய், டவ் ட்ரை ஷாம்பு இன்விசிபிள், டவ் ட்ரை ஷாம்பு டிடாக்ஸ் அண்ட் ப்யூரிஃபை, டவ் ட்ரை ஷாம்பு ஃப்ரெஷ் அண்ட் புளோரல், டவ் ட்ரை ஷாம்பு அல்ட்ரா கிளீன், டவ் ட்ரை சார்கூல் க்ளார் ஷாம்பு கோ ஆக்டிவ் , ட்ரெசெம்மி ட்ரை ஷாம்பு வால்யூமைசிங், ட்ரெசெம்மி டைரி ஷாம்பு ப்ரெஷ் அண்ட் க்ளீன் மற்றும் ட்ரெசெம்மி ப்ரோ ட்ரை ஷாம்பு போன்றவை ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை.

மேலும் படிக்க | Solar Eclipse 2022: சூரிய கிரகணத்தின் அழகான படங்கள்! இது விதவிதமான கிரகண புகைப்படங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News