ஆப்கானிஸ்தானில் தொடரும் இயற்கை சீற்றம்... அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிலநடுக்கங்கள்!

Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தான் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும் நிலையில், வரலாற்றில் இதுவரை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிலநடுக்கங்களை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 15, 2023, 04:59 PM IST
  • இன்றும் ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
  • பல கிராமங்கள் தரைமட்டமாகின.
ஆப்கானிஸ்தானில் தொடரும் இயற்கை சீற்றம்... அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிலநடுக்கங்கள்! title=

Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தானில் கடந்த அக். 7ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்லாயிரகணக்கானோர் உயிரிழந்தது உலகையே உலுக்கியது எனலாம். அதன் பாதிப்புகளில் இருந்தே முழுமையாக மீள இயலாத சூழலில், ஆப்கானிஸ்தானில் இன்றும் ஒரு மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் மேற்கு ஆப்கானிஸ்தானை இன்று தாக்கியது. கடந்த சில நாள்களுக்கு முன் அங்கு ஏற்பட்ட வலுவான நிலநடுக்கங்கள் மற்றும் பின்அதிர்வுகள் ஆயிரக்கணக்கான மக்களை உயிரிழக்கச் செய்தது. அதே பிராந்தியத்தில் உள்ள முழு கிராமங்களையும் தரைமட்டமாக்கியது. சமீபத்திய நிலநடுக்கத்தின் மையம் மாகாணத் தலைநகரான ஹெராட்டுக்கு வெளியே 34 கிலோமீட்டர் தொலைவிலும், மேற்பரப்பில் இருந்து எட்டு கிலோமீட்டர் ஆழத்திற்கும் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஹெராட் பிராந்திய மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஹெராத் மாகாணத்தின் அவசரகால நிவாரணக் குழுவின் தலைவர் முகமது ஜாஹிர் நூர்சாய் கூறுகையில், ஒருவர் உயிரிழந்ததாகவும், 150 பேர் காயமடைந்ததாகவும் கூறினார். பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் இன்னும் சென்றடையாததால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க | இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதல்: 2,100 பேர் பலி, ஒரே இரவில் 200 ஹமாஸ் இலக்குகள் அழிப்பு

அக்டோபர் 7ஆம் தேதி அன்று ஏற்பட்ட நிலநடுக்கங்கள் ஹெராட்டில் உள்ள முழு கிராமங்களையும் தரைமட்டமாக்கியது, இது நாட்டின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் அழிவுகரமான நிலநடுக்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு உயிரிழந்தவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐ.நா அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை (அக். 12) தெரிவித்தனர். முன்னதாக ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மாகாணம் முழுவதும் 2,000 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தலிபான் அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஆப்கானிஸ்தான் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதுடன், நாட்டின் மேற்கு மற்றும் நடுப்பகுதிகளில் பெரும்பாலும் அரேபிய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகள் ஒன்றுக்கொன்று எதிராக நிற்பதால் ஏற்படுகிறது. இது ஒருபுறம் இருக்க வரலாற்றில் ஆப்கானிஸ்தானை சீர்குலைத்த நிலநடுக்கங்கள் குறித்து இங்கே காணலாம். 

கயென் (1997)

1997ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லையில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இரு நாடுகளிலும் 1,500 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் மற்றும் 10,000க்கும் மேற்பட்ட வீடுகளை அழித்தது.

தகார் (பிப்ரவரி-மே 1998)

தொலைதூர வடகிழக்கு மாகாணமான தக்கரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 2,300 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சில மதிப்பீடுகளின்படி 4,000 வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மூன்று மாதங்களுக்குப் பிறகு, அதாவது மே மாதம் அதே பகுதியில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 4,700 பேர் உயிரிழந்தனர். 

மேலும் படிக்க | Palestine Israel Conflict: பாலஸ்தீன்-இஸ்ரேல் இடையே ஏன் மோதல்? ஆயிரக்கணக்கான உயிர் பலிக்கு யார் காரணம்?

இந்து குஷ் (1991, 2002, 2015)

இந்து குஷ் பகுதியில் 1991ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சோவியத் யூனியன் முழுவதும் 848 பேர் உயிரிழந்தனர். 2002ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்து குஷ் பகுதியில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களில் மொத்தம் 1,100 பேர் உயிரிழந்தனர்.

2015ஆம் ஆண்டில் இந்து குஷ் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்தான், ஆப்கானிஸ்தானின் பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிகப் பெரிய நிலநடுக்கமாகும். 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம், ஆப்கானிஸ்தானிலும் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் 399 பேர் உயிரிழந்தனர். 

குனார், பாக்திகா (2022) 

கடந்தாண்டு செப்டம்பரில் குனார் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்தனர். மேலும், கிழக்கு மாகாணமான பாக்திகாவில் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,036 பேர் உயிரிழந்தனர். இது பரவலான சேதத்தை ஏற்படுத்தியது. ஆப்கானிஸ்தானை சர்வதேச உதவிக்கு முறையிட கட்டாயப்படுத்தியது.

படக்ஷான் (2023)

6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் குறைந்த மக்கள்தொகை கொண்ட வடகிழக்கு மாகாணமான படாக்ஷானைத் தாக்கியது. ஜுர்ம் கிராமத்திலிருந்து தென்கிழக்கே 40 கி.மீ., துராத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் அண்டை நாடான பாகிஸ்தானில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர். 
 
மேலும் படிக்க | Palestine Israel Conflict: இஸ்ரேல் ஹமாஸ் மோதலுக்கு மத்தியில் இந்தியாவிடம் கோரிக்கை வைத்த பாலஸ்தீனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News