உயரத்தை அதிகப்படுத்தலாம்! 88 லட்சம் ரூபாய் செலவில் 7 இஞ்ச் உயரமான ஆறடி பாடிபில்டர்

Increase Height With Technology: 6 அடி உயரமுள்ள மனிதர் தனது உயரத்தை மேலும் அதிகரிக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்! இது, உயரமாக விரும்புபவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு ஊக்கம் அளிக்கிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 10, 2023, 09:10 AM IST
  • உயரத்தை அதிகப்படுத்த விருப்பமா?
  • 88 லட்சம் ரூபாய் செலவு செய்யத் தயாரா?
  • 7 அங்குலம் உயரத்தை அதிகரிக்கலாம்
உயரத்தை அதிகப்படுத்தலாம்! 88 லட்சம் ரூபாய் செலவில் 7 இஞ்ச் உயரமான ஆறடி பாடிபில்டர் title=

நியூடெல்லி: உயரம் குறைவாக இருப்பவர்களுக்கு, மனதில் பொதுவாகவே வருத்தம் இருக்கும். உடல் எடையைக் குறைக்கலாம், கூட்டலாம், ஆனால், உயரத்தை கூட்ட முடியுமா? இல்லை குறைக்க முடியுமா என்ற ஆதங்கம் சராசரி உயரத்தை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பவர்களுக்கு இருப்பது இயல்பு.

ஆனால், ஏற்கனவே ஆறு அடி உயரம் இருப்பவர், மேலும் உயரமாக ஆக விரும்பி, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அமெரிக்காவில் ஜார்ஜியாவைச் சேர்ந்த பாடிபில்டர் பிரையன் சான்செஸ், உடல் சமநிலை மற்றும் தன்னம்பிக்கைக்கான தேடலில் தனது விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறார்.

மேலும் படிக்க | சர்க்கரை நோயா... உடல் பருமன் குறையணுமா... ‘இந்த’ சர்க்கரைகளை தாராளமா சாப்பிடலாம்

6 அடி உயரமுள்ள மனிதர் தனது உயரத்தை மேலும் அதிகரிக்கும் முயற்சியில் பிரையன் சான்செஸ் வெற்றி பெற்றுள்ளார்! இது, உயரமாக விரும்புபவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு ஊக்கம் அளிக்கிறது. அவர் ஏற்கனவே 6 அடி உயரம் இருந்தபோதிலும், ஏழு அங்குலம் உயரமாக வளர 86,000 பவுண்டுகள் இந்திய ரூபாய் மதிப்பில் 88 லட்சத்திற்கும் மேல் செலவழித்துள்ளார்.

சான்செஸ், நல்ல கட்டுக்கோப்பான உடலைக் கொண்டவர். அவரது உடல் அவருக்கு அருமையானது என்று தெரிந்தாலும், ஒப்பீட்டளவில் கால்களுக்கு இடையே வெளிப்படையான வேறுபாடு இருப்பதை முதலில் உணர்ந்தார்.

"எனது கால்கள் எப்போதும் வித்தியாசமாகத் தோன்றுவதை நான் உணர்ந்தேன், அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை," என்று சான்செஸ் கூறினார். தனது உயரமே கொண்ட உறவினருடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்க நேர்ந்தபோது தன் கால்கள்தான் பிரச்சனை என்பதை உணர்ந்தார் பிரையன் சான்செஸ்.

மேலும் படிக்க | எடை ஏறுவதால் டென்ஷனா? கற்றாழை ஜூசை இப்படி குடிச்சு பாருங்க.. பட்டுனு குறையும்!!

இது குறித்து நிறைய ஆய்வுகள் செய்த பிரையன் சான்செஸ், கால்களை பெரிதாக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்தார். அதுதான் தனது பிரச்சினைகளுக்கு தீர்வு என்பதை உணர்ந்தார். 

டிசம்பர் 2022 இல் அதற்கான முயற்சியில் இறங்கிவிட்டார். ஆரம்ப நடைமுறை கடினமான பாதையாகவே இருந்தது. அறுவைசிகிச்சை மூலம், திபியா (tibia) மற்றும் ஃபைபுலா (fibula)  உடைக்கப்பட்டு, எலும்புகளுக்குள் ஒரு ராட் வைக்கப்பட்டு, திருகுகள் கொண்டு அது பொருத்தப்பட்டது.

திபியா என்பது, முள்ளெலும்பு எலும்பு அல்லது ஷாங்க்போன் என்றும் அழைக்கப்படும் திபியா, முதுகெலும்புகளில் முழங்காலுக்குக் கீழே உள்ள இரண்டு எலும்புகளின் பெரிய, வலுவான மற்றும் முன்புற எலும்பு ஆகும். முழங்கால் மற்றும் கணுக்கால் இடையே காலில் அமைந்துள்ள கீழ் மூட்டு எலும்பு, ஃபைபுலா என்று அழைக்கப்படுகிறது.

மேலும் படிக்க | தினமும் வெற்றிலை பாக்கு போட்டால் போதும்... கருத்தரிப்பு மையம் போகவே வேண்டாம்!

வெளிப்புற ஃபிக்ஸேட்டர்களைப் பயன்படுத்தி எலும்புத் துண்டுகள் இணைக்கப்பட்டன, பிறகு தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் பிரையன் சான்செஸ் இருந்தார். அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்ததால் தான் தனது உயரம் அதிகரித்தது, பிரச்சனையும் சரியானது என்று சான்செஸின் கூறுகிறார். அதிலும் ஃபிக்ஸேட்டர்களில் ஒரு போல்ட்டை தினமும் பலமுறை சுழற்ற வேண்டியிருந்தது மிகவும் வலி மிக்க நடைமுறை ஆகும்.

சில மாதங்களுக்குப் பிறகு, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், சான்செஸ் தனது தொடை எலும்பை நீட்டிப்பதற்கான இரண்டாவது செயல்முறையை செய்தார். இந்த சிகிச்சைக்காக அவர் மேலும் 56,000 பவுண்டுகள், அதாவது 57.5 லட்சம் ரூபாய் செலவழித்தார்.

அவரது எண்ணம், அவர் எதிர்பார்த்ததை விட சுமூகமாக நடந்தது, அறுவைசிகிச்சை முடிந்த பிறகு, அவர் வழக்கம் போல அனைத்து வேலைகளையும் செய்ய முடிந்தது. இறுதியில் ஆறடி மனிதன், தனது உயரத்தில் ஏழங்குலத்தை சேர்க்கும் முடிவில் வெற்றி பெற்றார்.

மேலும் படிக்க | 500 நோட்டு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்! ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News