5 படுக்கையறைகள் மட்டுமே உள்ள இந்த வீட்டின் விலை 16000 கோடி ரூபாய்! வாங்க ரெடியா?

Latest Costliest Home: ஐந்து படுக்கையறைகள் மட்டுமே உள்ள வீடு 60,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இருந்தாலும் 16000 கோடி ரூபாய் கொடுத்து வாங்க ஒரு இந்தியரும் தயாராக இருக்கிறாராம்!

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 15, 2023, 08:39 AM IST
  • உலகின் விலையுயர்ந்த வீட்டை வாங்கும் போட்டியில் இந்தியர்
  • 4000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள படுக்கையறை
  • எமிரேட்ஸ் ஹில்ஸ் சுற்றுப்புறத்தில் உள்ள ஆடம்பர வீடு
5 படுக்கையறைகள் மட்டுமே உள்ள இந்த வீட்டின் விலை 16000 கோடி ரூபாய்! வாங்க ரெடியா? title=

5 பெட்ரூம் கொண்ட வீட்டின் விலை என்னவாக இருக்கும்? எமிரேட்ஸ் ஹில்ஸ் சுற்றுப்புறத்தில் உள்ள ஆடம்பர வீடு ஒன்று, ரூ.1,600 கோடியில் விற்பனைக்கு இருக்கிறதாம். ஆச்சரியமாக இருக்கிறதா? இது துபாயின் மிக விலையுயர்ந்த வீடு என்பதும், அதை வாங்க விரும்புபவர்களில் இந்தியர்களும் உண்டு என்பது ஆச்சரியமான விஷயமாக உள்ளது.

ஐந்து படுக்கையறைகள் மட்டுமே உள்ள இந்த வீடு 60,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. ஆடம்பர ரியல் எஸ்டேட் தேவை அதிகம் உள்ள துபாயில், வெர்சாய்ஸை நினைவூட்டும் அரண்மனை 750 மில்லியன் திர்ஹாம்களுக்கு ($204 மில்லியன் அல்லது ரூ. 1,600 கோடி) விற்பனைக்கு வந்துள்ளது, ஆடம்பர வீடுகளுக்கு பெயர்போன நாடாக இருந்தாலும், அங்குள்ள மிகவும் விலையுயர்ந்த வீடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

மைதானத்தின் காட்சிகளைக் கொண்ட நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.  இரண்டு வங்கி பெட்டகங்கள், 12 பணியாளர்கள் அறைகள் உண்டு.

மேலும் படிக்க | Google Pay பயனர்கள் UPI ஆக்டிவேட் செய்ய ஆதாரை பயன்படுத்தலாம்!

4000 அடியில் படுக்கையறை

ஐந்து படுக்கையறைகள் மட்டுமே இருந்தாலும், பிரபலமான எமிரேட்ஸ் ஹில்ஸ் பகுதியில் உள்ள வீடு என்பதால் இந்த வீட்டிற்கு மவுசு அதிகமாக உள்ளதாம்! மாஸ்டர் படுக்கையறையின் அளவு ஒரு ஆடம்பர வீட்டை விட பெரியது. 4,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள அந்த ஒரு அறையை, பெட்ரூம் என்று சொல்கிறார்கள் என்றால், வீட்டின் ஆடம்பரத்தைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.

விருந்தினர் அறை

இரண்டாவது பெரிய படுக்கையறை 2,500 சதுர அடியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு விருந்தினர் அறையும் சுமார் 1,000 சதுர அடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விருந்தினர் அறை ஒன்று இப்போது அண்டர்கிரவுண்ட் பாராக அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த வீட்டின் தரைத் தளத்தில், பொழுதுபோக்கு மற்றும் உணவருந்துவதற்கான இடங்கள் உள்ளன. 15-கார் கேரேஜ், 19 ஓய்வறைகள், உட்புற மற்றும் வெளிப்புற குளங்கள், இரண்டு கூரைகள், 80,000 லிட்டர் (21,000 கேலன்) பவளப்பாறை மீன்வளம், ஒரு மின் துணை நிலையம் மற்றும் அவசர அறைகள் ஆகியவை என பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட வீடு இது.

பளிங்கு அரண்மனையின் கவர்ச்சிகரமான அம்சங்கள்

ரியல் எஸ்டேட் முகவர்களால் "மார்பிள் பேலஸ்" என்று அழைக்கப்படும் இந்த கட்டிடம், 80 முதல் 100 மில்லியன் திர்ஹாம்கள் வரை செலவாகும் இத்தாலிய மார்பிள் கல்லால் கட்டப்பட்டது. சொத்தை Luxhabitat Sotheby's International Realty விற்கிறது. கட்டுமானப் பணிகள் 12 ஆண்டுகள் ஆனது மற்றும் 2018 இல் முடிக்கப்பட்டது.

மேலும் படிக்க | Indian Railways: முன்பதிவில்லாத பெட்டிகள் முதலும், கடைசியுமாக மட்டும் இருப்பது ஏன் ? - உண்மை தகவல்!

எமிரேட்ஸ் ஹில்ஸ் குடியிருப்பு

12,500 திர்ஹாம்களுக்கு விற்கப்படும் எமிரேட்ஸ் ஹில்ஸில் உள்ள ஒப்பிடக்கூடிய குடியிருப்புகளை விட மார்பிள் அரண்மனை ஒரு சதுர அடிக்கு இரண்டு மடங்கு விலை அதிகம். துபாய் சொத்து பதிவுகளின்படி, இப்பகுதியில் இதுவரை விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த வீடு ஆகஸ்ட் 2022 இல் 210 மில்லியன் திர்ஹாம்கள் அல்லது ஒரு சதுர அடிக்கு 5,614 திர்ஹாம்கள்.

16000 கோடி ரூபாய் வீடு யாருக்கு சொந்தமாகும்?

தரகர் குணால் சிங்கின் மதிப்பீட்டின்படி, ஐந்து முதல் பத்து பேர் மட்டுமே இந்த வீட்டை வாங்க போதுமான வசதியும், மனமும் படைத்தவர்களாக இருப்பார்கள். மார்பிள் அரண்மனையின் தோற்றத்தில் ஆர்வமுள்ளவர்களாகவும் இருப்பதாகக் கருதப்படுகிறது. விற்பனை செய்வதாக அறிவிக்கப்பட்ட கடந்த மூன்று வாரங்களில் இரண்டு பேர் மட்டுமே வீட்டைப் பார்த்துள்ளனர்.

இவ்வளவு பணத்தை கொண்டு வீட்டை வாங்குவது என்பது ஒருவரின் வருமானத்தை கணக்குக் காட்டுவது போன்ற விஷயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஷ்யர் ஒருவர் இந்த வீட்டை வாங்க பார்த்திருக்கிறார்.

வீட்டை வாங்கும் உத்தேசத்தில் இருக்கும் இரண்டாவது வாடிக்கையாளர் இந்தியர் என்பது ஆச்சரியமாக உள்ளது.  எமிரேட்ஸ் ஹில்ஸில் ஏற்கனவே மூன்று குடியிருப்புகளைக் கொண்ட இந்தியரான அவர், வீட்டை வாங்குவது தொடர்பாக தனது மனைவி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறுகிறார். பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட அந்த சர்தாரின் மனைவி, வீடு இன்னும் கொஞ்சம் ‘மாடர்னாக’ இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்!  

மேலும் படிக்க | சொந்த வீடு வாங்க ஆசையா... குறைந்த வட்டியுடன் கடன் கொடுக்கும் வங்கிகள் இதோ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News