பகலில் தூங்குவதால் சுருங்கும் மூளை - பாதிப்புகள் என்ன தெரியுமா?

பகலில் தூங்கினால் பிரச்சனைகள் அதிகம் என்று காலங்காலமாக பேசப்பட்டு வந்த நிலையில், இந்த தூக்கம் மூளையின் சுருக்கத்தை குறைத்து ஆரோக்கிய நன்மைகள் கொடுப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 2, 2023, 04:21 PM IST
  • பகலில் குட்டி தூக்கம் போடலாமா?
  • உடலுக்கு பாதிப்பு ஏதேனும் வருமா?
  • சந்தேகங்களுக்கு ஆய்வு சொல்லும் தீர்வு
பகலில் தூங்குவதால் சுருங்கும் மூளை - பாதிப்புகள் என்ன தெரியுமா? title=

மூளை சுருக்கத்தை குறைக்கும் தூக்கம்

நம்மில் சிலருக்கு பகலில் தூங்கும் பழக்கம் இருக்கும். வாய்ப்பு கிடைத்தவுடனே, கண்டிப்பாக மதியம் தூங்குவோம். இந்த தூக்கம் உடலுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் ஒரு புதிய ஆய்வில், பகலில் தூங்குவது உடலுக்கு பல நன்மைகளை தருவதாக தெரியவந்துள்ளது. ஆய்வின் படி, பகலில் ஒரு தூக்கம் எடுப்பது மூளையின் சுருக்கத்தை குறைக்கிறது மற்றும் மூளை ஆரோக்கியம் பெரிதும் பயனடைகிறது. உண்மையில், வயது அதிகரிக்கும்போது, ​​மூளையின் நினைவாற்றல் பகுதி சிறிது சிறிதாக சுருங்கத் தொடங்குகிறது. ஆனால் பகலில் குட்டித் தூக்கம் போட்டால், அது சுருங்கி நின்றுவிடும்.

மேலும் படிக்க | நோய்நொடிகளுக்கு எதிரியாகும் பழங்கள்! புரதச்சத்து உள்ள பழங்கள்

மூளையின் நினைவக அளவு அதிகரித்தது

UCL மற்றும் உருகுவேயில் உள்ள குடியரசு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆய்வு 40 முதல் 69 வயதுடையவர்களை மத்தியில் பரிசோதித்தனர். பகலில் குட்டித் தூக்கம் போடுபவர்களுக்கு, தூக்கம் வராதவர்களை விட மூளையின் அளவு அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது பகலில் தூங்குபவர்களுக்கு முதுமையில் ஏற்படும் டிமென்ஷியா என்ற நோயின் ஆபத்து மிகக் குறைவு. மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் விக்டோரியா கார்ஃபீல்ட் கூறுகையில், பகலில் தூங்குவது ஒரு புதிரைத் தீர்ப்பது போன்றது. இது ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக மூளையின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதை இந்த ஆய்வு நிரூபிக்கிறது என கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறந்தது

ஆய்வில், 3.78 லட்சம் பேரின் தரவு UK Biobank-ல் இருந்து எடுக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது. மரபணு ரீதியாக குட்டி தூக்கம் போடுபவர்களுக்கு மூளையின் அளவு அதிகமாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தூக்கம் போடாதவர்களின் மூளையின் சராசரி அளவு 2.6 முதல் 6.5 ஆண்டுகள் வரை அதிகமாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மூளையின் ஹிப்போகாம்பல் பகுதியின் கன அளவில் ஆராய்ச்சியாளர்கள் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், முழு மூளையின் அளவும் சற்று அதிகரித்தது. ஒரு வகையில், பகல் தூக்கம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தூக்கத்திற்கும் மூளைக்கும் இடையிலான நேர்மறையான உறவை வெளிக்கொணர்வதற்கான செய்யப்பட்ட முதல் ஆய்வு இதுவாகும்.

மேலும் படிக்க | ஆர்வ கோளாறுல அதிக விட்டமின் மாத்திரை சாப்பிடாதீங்க.. பேராபத்தை ஏற்படுத்தும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News