அண்ணா சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை - இனி அவருக்கு பதில் யார்?

Anna TV Serial Online: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அண்ணா சீரியலில் இருந்து தர்ஷு தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Apr 9, 2024, 01:49 PM IST
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் அண்ணா.
  • தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
  • தற்போது தர்ஷு இதில் இருந்து விலகி உள்ளார்.
அண்ணா சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை - இனி அவருக்கு பதில் யார்?  title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடிக்க நித்யா ராம் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் பூ விலங்கு மோகன், ரோசரி, சத்யா, சுனிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அம்மா காணாமல் போன நிலையில் ஷண்முகம் அண்ணனுக்கு அண்ணனாக அப்பாவுக்கு அப்பாவாக அம்மாவுக்கு அம்மாவாக இருந்து தனது குடும்பத்தை எப்படி கரை சேர்கிறார் என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம், நான்கு தங்கைகளில் ஒருவராக நடித்து வீரா என்ற கதாபாத்திரத்தில் முதலில் அயலி வெப் சீரிஸ் மூலமாக பாப்புலரான தாரா நடித்து வந்தார். 

மேலும் படிக்க | Prasanth : நடிகர் பிரசாந்திற்கு 2வது திருமணமா? மணப்பெண் யார் தெரியுமா?

சந்தியா ராகம் சீரியலில் நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவே அவர் இந்த சீரியலில் விலகி கொள்ள அவருக்கு பதிலாக தொகுப்பாளினியாக வலம் வந்த தர்ஷு நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் தவிர்க்க முடியாத காரணங்களாலும் தன்னுடைய குடும்பத்துடன் இருக்க வேண்டிய கட்டாயத்தாலும் இந்த சீரியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். மேலும் அண்ணா டீமை மிஸ் பண்ணுவேன் எனவும் வீரா கேரக்டரில் புதியதாக நடிக்க உள்ள நடிகைக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by

மேலும் இதுவரை தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதனால் இனி அவருக்கு பதிலாக நடிக்க போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. வீரா கேரக்டரில் நடிக்க புதிய நடிகைக்கான தேர்வும் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் விரைவில் யார் அந்த நடிகை என்பது தெரிய வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் வீரா கதாபாத்திரத்தில் யார் நடித்தால் பொருத்தமா இருக்கும்? நீங்கள் என்ன நினைக்கறீர்கள் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.

மேலும் படிக்க | புஷ்பா இஸ் பேக்... அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா தி ரூல் படத்தின் டீசர் வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News