DTAA for NRI: வெளிநாட்டில் வசிக்கும் என்ஆர்ஐ -கள் இரட்டை வரியைத் தவிர்க்க டிடிஏஏவைப் பெறுவது எப்படி?

DTAA for NRI: புதிய நிதியாண்டு முதல், வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் வரியைச் சேமிக்கலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 3, 2023, 04:38 PM IST
  • டிடிஏஏ என்றால் என்ன?
  • என்ஆர்ஐ -க்கான DTAA விகிதங்கள் என்ன?
  • என்ஆர்ஐ இரட்டை வரியைத் தவிர்க்க டிடிஏஏ -வின் பலனை பெறுவது எப்படி?
DTAA for NRI: வெளிநாட்டில் வசிக்கும் என்ஆர்ஐ -கள் இரட்டை வரியைத் தவிர்க்க டிடிஏஏவைப் பெறுவது எப்படி?  title=

NRI க்கு இரட்டை வரி: வெளிநாட்டில் வாழ்ந்து இந்திய வணிகத்தில் இருந்து சம்பாதிக்கும் இந்திய குடிமக்கள் உள்ளனர். மறுபுறம், வெளிநாட்டு குடிமக்களும் நம் நாட்டில் வாழ்ந்து தங்கள் நாட்டிற்காக வேலை செய்கிறார்கள். இவர்கள் மீது இரட்டை வரிச் சுமை ஏற்படுகின்றது. புதிய நிதியாண்டு முதல், வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் வரியைச் சேமிக்கலாம். இதுமட்டுமின்றி, நம் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டு குடிமக்களும் இரட்டை வரியை மிக எளிதாக தவிர்க்கலாம். இதற்கு வழிவகை செய்யும் இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் (DTAA) பற்றி இந்த பதிவில் காணலாம்.

என்ஆர்ஐ -க்கான டிடிஏஏ என்றால் என்ன

2 நாடுகளில் பெறும் வருமானத்திற்கு வரி செலுத்துவதைத் தவிர்க்க, DTAA எனப்படும் ஒரு வகையான ஒப்பந்தம் உள்ளது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் மக்கள் வரியைச் சேமிக்க முடியும். இந்த ஒப்பந்தம் நீங்கள் முழு வரி விலக்கு பெறுவதைக் குறிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளிலும் வரி செலுத்துவதற்கு பதிலாக, ஒரே ஒரு நாட்டில் மட்டும் வரி செலுத்துவதற்கு DTAA பயன்படுத்தப்படலாம். இந்த வருமான வரிச் சட்டம் வரி ஏய்ப்பைத் தவிர்க்க உருவாக்கப்பட்டது.

என்ஆர்ஐ -க்கான DTAA விகிதங்கள்

DTAA விகிதங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் ஒரே மாதிரியாக இருக்காது. இதில் மாறுபாடு இருக்கலாம். உண்மையில் இரு நாடுகளும் இணைந்து வரி விகிதத்தை தீர்மானிக்கின்றன. இதற்குப் பிறகு, என்ஆர்ஐ -கள், வருமானம் கிடைத்த பிறகு, அதே விகிதத்தில் வரி செலுத்துகிறார்கள். 

மேலும் படிக்க | அபுதாபியில் புதிய விசா ஸ்க்ரீனிங் மையம் திறக்கப்பட்டது

எளிமையான வார்த்தைகளில் சொல்வதானால், இரு நாடுகளுக்கு இடையேயான வரி விகிதத்தை நிர்ணயித்த பிறகு, என்ஆர்ஐ- கள் மற்றும் நம் நாட்டில் பணி புரியும் வெளிநாட்டவர் ஒரு நாட்டில் மட்டும் வரி செலுத்தி, இரு நாடுகளிலும் வரி செலுத்துவதைத் தவிர்க்கலாம். அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கான DTAA விகிதங்கள் 15%, யுனைடெட் கிங்டமில் 15%, ஜெர்மனியில் 10%, கனடாவில் 15% மற்றும் தென்னாப்பிரிக்காவில் 10% ஆகும்.

என்ஆர்ஐ இரட்டை வரியைத் தவிர்க்க டிடிஏஏ -வின் பலனை பெறுவது எப்படி

என்ஆர்ஐ -கள் இரட்டை வரியைத் தவிர்க்க 2 முறைகளைப் பின்பற்றலாம். வரிச் சலுகைகள் மற்றும் வரி சேமிப்பு ஆகியவை இதில் அடங்கும். DTAA இன் கீழ் டேக்ஸ் கிரெடெட், அதாவது எந்த நாட்டில் என்ஆர்ஐ வசிக்கிறாரோ, அங்கு இதற்காக விண்ணப்பிக்கலாம். 

இது தவிர, வரிச் சேமிப்பின்படி, இரு நாடுகளிலும் இரட்டை வரி செலுத்தலைத் தவிர்க்க என்ஆர்ஐ-க்கள் ஏதாவது ஒரு நாட்டில் இதற்காக விண்ணப்பிக்கலாம். எளிமையான வார்த்தைகளில் சொல்வதானால், இரண்டு நாடுகளில் ஏதேனும் ஒன்றில் மக்கள் வரி செலுத்த வேண்டியது அவசியமாகும். நீங்களும் ஒரு என்ஆர்ஐ ஆக இருந்தால், இந்த வழிகளில் வரியைச் சேமிக்கலாம்.

மேலும் படிக்க | 15 பயணிகளை விட்டுவிட்டு பறந்த விஜயவாடா - குவைத் விமானம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News