விராட் கோலி வேண்டுமென ஜெய்ஷாவிடம் மல்லுக்கட்டிய ரோகித் சர்மா! 20 ஓவர் உலக கோப்பை அப்டேட்

விராட் கோலி 20 ஓவர் உலக கோப்பைக்கான அணியில் இருக்கம்மாட்டார் என கூறப்பட்ட நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

 

1 /6

ஐபிஎல் 2024 தொடர் முடிந்த ஒரு வார இடைவெளியில் 20 ஓவர் உலக கோப்பை நடைபெற இருக்கிறது. இந்த தொடரை முதன்முறையாக அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

2 /6

அமெரிக்காவில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு பிரத்யேகமாக மைதானம் புதிதாக தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்திய அணியில் யார் யாருக்கு வாய்ப்பு? என்ற பெரிய விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது.

3 /6

ரிங்கு சிங் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் விளையாட இருக்கும் நிலையில், விராட் கோலிக்கு இந்த முறை 20 ஓவர் அணியில் வாய்ப்பளிக்கப்படாது என்ற தகவல் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அவர் கடந்த முறை நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பைக்குப் பிறகு இந்திய அணிக்காக சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விளையாடவில்லை.

4 /6

அதனால் அவருக்கு ஜூன் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடமளிக்க வாய்ப்பில்லை என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு இதுகுறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

5 /6

ஐபிஎல் போட்டியில் விராட் கோலியின் ஆட்டத்தை பார்த்துவிட்டு முடிவு செய்யலாம் என பிசிசிஐ இப்போதைக்கு முடிவு செய்து வைத்திருக்கிறது. அதேநேரத்தில் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக செயல்பட இருக்கும் ரோகித் சர்மா, விராட் கோலி கட்டாயம் இந்திய அணியில் வேண்டும் என கேட்டிருக்கிறாராம்.

6 /6

இதுகுறித்து இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவிடம் நேரடியாகவே ரோகித் சர்மா பேசிவிட்டாராம். ஆனால் ரோகித் சர்மாவின் வேண்டுகோளுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லையாம். ஒருவேளை விராட் கோலி ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிவிட்டால் அவருக்கான இடத்தை அவரே தீர்மானித்துவிடுவார் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.