மேஷத்தில் புதன் பெயர்ச்சி: நாளை முதல் பண மழையில் நனையப்போகும் ராசிகள் இவைதான்

Budhan Peyarchi Palangal: புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சில ராசிகளுக்கு சுப பலன்களும் சிலருக்கு பிரச்சனைகளும் ஏற்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 9, 2024, 02:54 PM IST
  • துலா ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
  • உடல் ஆரோக்கியம் மேம்படும்.
  • வியாபாரத்தில் லாபம் கூடும்.
மேஷத்தில் புதன் பெயர்ச்சி: நாளை முதல் பண மழையில் நனையப்போகும் ராசிகள் இவைதான் title=

Budhan Peyarchi Palangal: ஜோதிட கணக்கீடுகளின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது. 

 கிரகங்களின் இளவரசரான புதன் மே 10 வெள்ளிக்கிழமை இரவு 07:03 மணிக்கு தனது ராசியை மாற்றி பெயர்ச்சி ஆகவுள்ளார். மீன ராசியிலிருது விலகி புதன் மேஷ ராசியில் பெயர்ச்சி ஆவார். புதன் இந்த ராசியில் 21 நாட்கள் இருந்துவிட்டு மீண்டும் மே 31 மதியம் 12:20 மணிக்கு தனது ராசியை மாற்றுவார். புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சில ராசிகளுக்கு சுப பலன்களும் சிலருக்கு பிரச்சனைகளும் ஏற்படும். சில ராசிகளுக்கு புதன் பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். இவர்கள் வாழ்வில் பல வெற்றிகளை காண்பார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

மிதுனம் (Gemini)

மேஷ ராசியில் புதன் பெயர்ச்சி, மிதுன ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்கும். இந்த காலத்தில் பணி இடத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. பல வித சாதனைகளை செய்வீர்கள். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். இதனால் பொருளாதார நிலை மேம்படும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். 

கடக ராசி (Cancer)

கடக ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியால் மன நிலை மேம்படும். மன அழுத்தம் மற்றும் டென்ஷனில் இருந்து நிவாரணம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி அதிகரிக்கும். பணி இடத்தில் இடமாற்றம் ஏற்படலாம். பணியிடத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இது உங்கள் எதிர்காலத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் இனிமை இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழுமையான ஆதரவு கிடைக்கும். 

மேலும் படிக்க | சனி பகவானுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: அதிகம் படுத்தாமல் அருள் மழை பொழிவார் சனி

துலாம் (Libra)

துலா ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் லாபம் கூடும். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். குடும்ப உறவுகள் வலுவாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். 

கும்பம் (Aquarius)

புதன் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு சுப விளைவுகளை ஏற்படுத்தும். புதிய வாகனங்கள் வாங்கலாம். வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் ஈட்டலாம். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். மூத்தவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.பயணம் செல்ல வாய்ப்புகள் ஏற்படும். இந்த பயணத்தால் சாதகமான விளைவுகள் ஏற்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை தேடும் மாணவர்களுக்கு இந்த காலம் வரப்பிரசாதமாக அமையும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி நட்சத்திர பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு அரச பொற்காலம் ஆரம்பம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News