இஷான் கிஷன் பற்றி ஜெய் ஷாவிடம் போட்டுக்கொடுத்த ரோகித், டிராவிட்..!

Ishan Kishan: தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து பாதியில் வெளியேறிய இஷான் கிஷன் பற்றி பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் இந்திய அணியின் கேப்டன் ரோகித், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் போட்டுக் கொடுத்துள்ளனர். இதனால் அவருக்கு இப்போது மறைமுக எச்சரிக்கையை ஜெய் ஷா கொடுத்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 16, 2024, 06:40 AM IST
  • இஷான் கிஷனுக்கு ஜெய் ஷா எச்சரிக்கை
  • ரஞ்சி டிராபியில் விளையாட வேண்டும்
  • இல்லையென்றால் இந்திய அணியில் வாய்ப்பில்லை
இஷான் கிஷன் பற்றி ஜெய் ஷாவிடம் போட்டுக்கொடுத்த ரோகித், டிராவிட்..! title=

இந்திய கிரிக்கெட் அணியில் இஷான் கிஷன் மீண்டும் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அவர் தொடர்ச்சியாக இந்திய அணயின் பிளேயிங் லெவனில் இருந்து புறக்கணிக்கப்பட்டதால் தென்னாப்பிரிக்க தொடரில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மீது கடும் அதிருப்தி அடைந்தார். அதனால், தனக்கு அணியில் இருந்து விடுப்பு வேண்டும் என கேட்டுவிட்டு இந்தியா திரும்பிய அவர், எந்த கிரிக்கெட்டும் விளையாடாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தார். நண்பர்களின் திருமணம் மற்றும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

மேலும் படிக்க | 'டி20 உலகக் கோப்பையில் இவர் தான் கேப்டன்...' உண்மையை போட்டுடைத்த ஜெய் ஷா!

இது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசும்போது, இஷான் கிஷன் இப்போது விடுப்பு வேண்டும் என கேட்டு சென்றிருக்கிறார். அவரது முடிவை மதித்து நாங்கள் அவருக்கு விடுப்பு கொடுத்திருக்கிறோம் என தெரிவித்தார். மேலும், மீண்டும் இந்திய அணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்றால் இஷான் கிஷன் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும், அதன்பின் இந்திய அணி தேர்வுக்கு தான் தயாராக இருப்பதாக தெரிவித்தால், அதன்பின் நாங்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்வது குறித்து பரிசீலிப்போம் என கூறினார். டிராவிட் இவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லியும் ரஞ்சி டிராபியில் விளையாடுவது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தார் இஷான் கிஷன்.

இது இந்திய கிரிக்கெட் வாரியத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்திய அணியின் தேர்வுக்குழுவும் இது குறித்து கலந்தாலோசனை செய்து பயிற்சியாளர் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் நேரடியாகவே இஷான் கிஷன் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் புகாரளித்துள்ளனர். இஷான் கிஷனின் நடவடிக்கையை கண்டு அதிருப்தி அடைந்த ஜெய் ஷாவும், சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க விழாவில் கலந்து கொண்டு பேசும்போது தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார். 

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சம்பள ஒப்பந்தத்தில் இருக்கும் எந்தவொரு பிளேயரும் தேசிய அணியில் விளையாடவில்லை என்றால் கட்டாயம் ரஞ்சி டிராபி உள்ளிட்ட உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதற்கு கொடுக்கப்படும் எந்த சாக்குபோக்கு காரணங்களையும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொள்ளாது என்றும் கடும் எச்சரிக்கையாகவே தெரிவித்துள்ளார். இதனால் இஷான் கிஷன் இப்போது ரஞ்சி டிராபியில் விளையாட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஒருவேளை இந்த எச்சரிக்கையையும் அவர் புறக்கணித்தால் இந்திய அணியில் அவர் இனி விளையாடுவது கேள்விக்குறி தான். 

மேலும் படிக்க | IPL 2024 Full Schedule: ஐபிஎல் 2024 தொடங்கும் தேதி மற்றும் முழு அட்டவணை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News