Sanju Samson: சஞ்சுவுக்கு ஒரு இடத்தை புக் பண்ணுங்க பிசிசிஐ! 5 வருசமா இதை கவனிக்காம விட்டுடீங்களே?

Sanju Samson, Rajasthan Royals captain: சஞ்சு சாம்சன் அதிரடியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 24, 2024, 09:20 PM IST
  • சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி அரைசதம்
  • 5 வருசமாக முதல் போட்டிகளில் அரைசதம் அடிக்கிறார்
  • 20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்குமா?
Sanju Samson: சஞ்சுவுக்கு ஒரு இடத்தை புக் பண்ணுங்க பிசிசிஐ! 5 வருசமா இதை கவனிக்காம விட்டுடீங்களே? title=

ஐபிஎல் 2024 தொடரில் முதல் லீக் போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் அணிகள் மோதிய இப்போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. டாஸ் வெற்றி பெற்ற ராஸ்ஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, ஆர்ஆர் அணியில் இருந்து யஷஸ்வி ஜெய்ஷ்வால், ஜாஸ் பட்லர் ஆகியோர் ஓப்பனிங் இறங்கினர். அதிரடியாக ஆடிய யஷஸ்வி 12 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சர் விளாசி 24 ரன்கள் எடுத்திருந்தபோது மொஷின்கான் பந்துவீச்சில் குருணால் பாண்டியாவிடம் கேட்ச் என்ற முறையில் அவுட்டானார். இன்னொரு முனையில் இருந்த பட்லர் 11 ரன்கள் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்து களம் புகுந்த சாம்சன், ரியான் பராக் ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்தது.

மேலும் படிக்க | வெற்றியை நழுவ விட்ட லக்னோ... அஸ்வின் எடுத்த அந்த விக்கெட் - RR வெற்றிக்கு இதுதான் காரணம்!

இருவரும் அதிரடியாக விளையாடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரன்ரேட்டை உயர்த்தினர். சாம்சன், பராக் இருவரும் மாறிமாறி சிக்சர்களும், பவுண்டரிகளுமாக விளாசினர். இதனால் ஆர்ஆர் அணியின் ரன்ரேட் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருந்தபோது, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல், நவீன் உல் ஹக்கை பந்துவீச அழைத்தார். விக்கெட் எடுத்தே ஆகவேண்டும் என்ற நிலையில் பந்துவீச வந்த நவீன் உல்ஹக் 29 பந்துகளில் 43 ரன்கள் குவித்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரியான் பராக் விக்கெட்டை கைப்பற்றினார். பராக் 3 சிக்சர்களும், 1 பவுண்டரியும் எடுத்திருந்தார்.

இருப்பினும் சாம்சன் அதிரடியாக ஆடுவதை நிறுத்தவே இல்லை. கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த சாம்சன் 52 பந்துகளில் 82 ரன்கள் குவித்திருந்தார். இதில் 6 சிக்சர்களும் 3 பவுண்டரிகளும் அடங்கும். துருவ் ஜூரல் 12 பந்துகளில் 20 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ராகுல் 58 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 64 ரன்களும் விளாசினர். முடிவில் லக்னோ அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் அந்த கோப்பையை சிறப்பாக பந்துவீசிய சந்தீப்புக்கு கொடுப்பதாக அவர் அறிவித்தார். ஐபிஎல் தொடரில் 2020 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை அதிக சிக்சர்கள் விளாசிய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 99 சிக்சர்களுடன் சஞ்சு சாம்சன் முதல் இடத்தில் இருக்கிறார். 2020 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 5 ஆண்டுகளிலும் ஐபிஎல் முதல் போட்டியில் அரைசதம் அடித்திருக்கிறார் சாம்சன். 2021 ஆம் ஆண்டு மட்டும் முதல் ஐபிஎல் போட்டியில் சதம் விளாசியிருக்கிறார்.

மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் தவறவிட்ட தங்கம்... சிக்ஸர் மழையால் திணறிய மைதானம் - யார் இவர்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News