சுப்மான் கில் இப்படியா அவுட்டாவது?வெளுத்து வாங்கிய இந்திய அணியின் முன்னாள் வீரர்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மான் கில் அவுட்டான விதம் குறித்து சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் நினைப்பில் விளையாடுகிறார் என தெரியவில்லை என்றும் புலம்பியுள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 27, 2024, 10:40 AM IST
  • மோசமான ஷாட்டில் கில் அவுட்
  • கடுமையாக விமர்சித்த கவாஸ்கர்
  • முதல் இன்னிங்ஸில் இந்தியா 436 ரன்கள்
சுப்மான் கில் இப்படியா அவுட்டாவது?வெளுத்து வாங்கிய இந்திய அணியின் முன்னாள் வீரர் title=

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் சுப்மான் கில் 23 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இந்திய அணியின் இளம் நட்சத்திரமாக இருக்கும் சுப்மான் கில் பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும் என எல்லோரும் எதிர்பார்ப்பில் இருக்க, அவர் விக்கெட்டை பறிகொடுத்த விதம் விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுனில் கவாஸ்கர், சுப்மான் கில் அவுட்டான விதத்தை கேள்வி எழுப்பியுள்ளார். 

சுனில் கவாஸ்கர் விமர்சனம்

66 பந்துகள் எதிர்கொண்ட சுப்மான் கில் 2 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்து மிட்விக்கெட்டில் கேட்ச் என்ற முறையில் வெளியேறினார். இது குறித்து பேசியிருக்கும் கவாஸ்கர், கல்லின் ஷாட் சலெக்ஷன் சிறப்பாக இருக்கவில்லை, என்ன நினைப்பில் விளையாடிக் கொண்டிருக்கிறார் என என்னால் அனுமானிக்க முடியவில்லை என கூறியுள்ளார். " தனக்கான இடத்தில் கில் களமிறங்கி செட்டிலாகிக் கொண்டிருந்தார். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் எதற்கு அப்படியான ஷாட் என தெரியவில்லை. அடிக்க வேண்டும் என முடிவெடுத்த பிறகு நல்ல கேப்பை பார்த்து அடித்திருக்க வேண்டும். ஆனால், இவ்வளவு கஷ்டப்பட்டு விளையாடி மோசமான ஷாட்டில் அவுட் ஆவதை நான் எதிர்பார்க்கவில்லை" என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க  | 252 ஆண்டுகளில் முதல்முறை! இந்தியா பேட்டர் செய்த வரலாற்று சாதனை!

ஜடேஜா சிறப்பான பேட்டிங்

இருப்பினும் இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையிலேயே இருக்கிறது. கே.எல்.ராகுல் 86 ரன்கள் எடுத்து அவுட்டாக, பின் வரிசையில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா நங்கூரம்போல் நிலைத்து நின்று விளையாடினார். அவருக்கு பக்கபலமாக அக்சர் படேலும் நல்ல கம்பெனி கொடுத்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 87 ரன்களுக்கு ஜோ ரூட் பந்துவீச்சில் விக்கெட்டை பறி கொடுத்து நடையை கட்டினார் ஜடேஜா. 

இந்திய அணி ஆல்அவுட்

மறுமுனையில் 44 ரன்களுக்கு அக்சர் படேல் விக்கெட்டை பறி கொடுக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 436 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆல்அவுட்டானதால், இப்போது அந்த அணியை விட 190 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது இந்தியா. இதனையடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க இருக்கிறது. 

மேலும் படிக்க | ஹைதராபாத் டெஸ்ட்: ராகுலின் சதம் ஜஸ்ட் மிஸ்... ஆனால் அவர் செஞ்ச சம்பவம் பெரிசு..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News