இலங்கை அணிக்கு எதிராக வாண வேடிக்கை!! ... சதமடித்த சூர்யகுமார் யாதவ்

இலங்கை அணிக்கு எதிரான 3வது 20 ஓவர் போட்டியில் வாண வேடிக்கைகள் காட்டிய சூர்ய குமார் யாதவ், 20 ஓவர் போட்டியில் 3வது சர்வதேச சதத்தை பூர்த்தி செய்தார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 7, 2023, 09:07 PM IST
  • இலங்கை அணிக்கு எதிராக வாண வேடிக்கை
  • இந்திய அணி அபார பேட்டிங் - 200 ரன்கள் குவிப்பு
  • 20 ஓவர் போட்டியில் சூர்யகுமார் 3வது சதம்
இலங்கை அணிக்கு எதிராக வாண வேடிக்கை!! ... சதமடித்த சூர்யகுமார் யாதவ் title=

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது 20 ஓவர் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தொடக்கத்தில் இஷான் கிஷன் விக்கெட்டை இழந்தாலும், அடுத்த வந்த பிளேயர்கள் அதிரடியாக விளையாடியதால் 20 ஓவர் முடிவில் 228 ரன்களை குவித்தது. மைதானத்தில் வாண வேடிக்கைகள் காட்டிய சூர்ய குமார் யாதவ், 51 பந்துகளில் 112 ரன்கள் குவித்தார்.

இந்திய அணி பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் சுப்மான் கில் களமிறங்கினர். கடந்த போட்டியில் சொற்ப ரன்களில் அவுட்டான இஷான் கிஷன் இந்தப் போட்டியிலும் ஏமாற்றினார். 1 ரன்னுக்கு அவர் விக்கெட் கொடுத்து வெளியேற அடுத்து வந்த ராகுல் திரிபாதி அதிரடி காட்டினார். சுப்மான் கில் ஒருபுறம் நிதானமான ஆடிக் கொண்டிருந்தார். 16 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ராகுல் திரிபாதி விக்கெட் பறிகொடுத்த நிலையில், சுப்மான் கில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

மேலும் படிக்க | விராட் வருவார்... உலகக்கோப்பையை வாங்கித் தருவார்... சீக்காவின் சொல்லும் சீக்ரெட்

சூர்யகுமார் யாதவ் வாண வேடிக்கை

ஆனால், ஒருமுனையில் விக்கெட் விழுவதையெல்லாம் சூர்யகுமார் யாதவ் கண்டுகொள்ளவே இல்லை. வழக்கம்போல் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை விளையாடிய அவர், மைதானம் முழுவதும் வாண வேடிக்கைகளை காட்டிக் கொண்டிருந்தார். 51 பந்துகளை எதிர்கொண்ட சூர்யகுமார் யாதவ், 112 ரன்கள் விளாசினார். இதில் 9 சிக்சர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். சூர்யகுமார் 20 ஓவர் போட்டியில் அடித்த 3வது சர்வதேச சதமாகும் இது பதிவானது.

அக்சர் அபாரம்

கடைசி கட்டத்தில் களமிறங்கிய அக்சர் படேல் இந்த போட்டியிலும் அதிரடியாக விளையாடினார். 9 பந்துகள் விளையாடிய அக்சர், 21 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியிலும் தன்னுடைய பேட்டிங் திறமையை காண்பித்தால் இந்திய அணி நிர்வாகம் மகிழ்ச்சியில் உள்ளது. ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக குறைந்த பந்தில் சதமடித்த 2வது வீரர் என்ற சாதனை சூர்யகுமார் வசம் உள்ளது. 

மேலும் படிக்க | அக்சர் படேலால் மூத்த வீரரின் இந்திய அணி வாய்ப்பு கேள்விக்குறி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News