உதயநிதி ஸ்டாலின் என்னைப் பற்றி பேசக்கூடாது - எடப்பாடி பழனிசாமி வழக்கு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடுகோரி அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 11, 2023, 08:27 PM IST
  • உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு
  • என்னைப் பற்றி பேசக்கூடாது
  • எடப்பாடி பழனிசாமி மனு
உதயநிதி ஸ்டாலின் என்னைப் பற்றி பேசக்கூடாது - எடப்பாடி பழனிசாமி வழக்கு title=

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியது. இந்திய அளவில் பேசப்பட்ட இந்த விவாகாரத்துக்கு பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் அறிவித்தார். அவரது தலைக்கு இந்த சன்மானம் போதவில்லை என்றால் இன்னும் உயர்த்தி கூட அறிவிப்பதாக தெரிவித்தார். ஒரு மாநிலத்தின் அமைச்சருக்கு எதிராக சர்ச்சையாக பேசிய அவரை உத்தரப்பிரதேச அரசு கைது செய்யவில்லை. குறைந்தபட்சம் வழக்கு கூட பதியவில்லை.

மேலும் படிக்க | ஹை யூரிக் ஆசிட் இருக்கா? இந்த வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்

இது ஒருபுறம் இருக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலதுசாரி அமைப்புகள் வலியுறுத்தின. ஆனால் அவர் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது அந்த பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அத்துடன் சனாதனம் குறித்த தன்னுடைய கருத்துக்கு அதிமுகவின் நிலைப்பாட்டை அறிய விரும்புவதாக வெளிப்படையாகவே பேசினார். குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ன சொல்கிறார் என கேட்டுச் சொல்லுங்கள் என செய்தியாளர்களிடம் கூறினார். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி அதிமுக என்பது மதம் மற்றும் சாதிகளுக்கு அப்பாற்பட்டது என முடித்துக் கொண்டார். 

அத்துடன் விடாத அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சானாதனத்திற்கான அர்த்தத்தை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன் வீட்டில் உள்ள புத்தக அலமாரியில் இருக்கும் தேடிக் கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார். கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஆட்டுதாடியின் பின்னால் நீண்ட நாள் ஒளிஞ்சிருக்க முடியாது என்றும், அந்த ஆடே காணாமல் போகும்போது உங்கள் நிலைமை என்னாகும் என்பதை யோசித்துப் பாருங்கள் என்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த அறிக்கையில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பு வகையிலும், உதயநிதி பேசியிருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மான நஷ்ட ஈடுகோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தன்னை பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட் ஈடாக வழங்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் படிக்க | முகம் நிலா போல் பிரகாசமாக இருக்கணுமா? இந்த வீட்டு வைத்தியம் உடனடி பலன் தரும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News