தமிழ்நாட்டில் இன்றும் கொளுத்தபோகும் வெயில்! மக்களே உஷாராக இருங்கள்

today's temperature Tamilnadu : தமிழ்நாட்டில் இயல்பை விட இன்று 4 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 27, 2024, 07:34 AM IST
  • தமிழ்நாட்டை சுட்டெரிக்கப்போகும் வெயில்
  • இயல்பைவிட 4 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் கூடும்
  • பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் இன்றும் கொளுத்தபோகும் வெயில்! மக்களே உஷாராக இருங்கள் title=

தமிழ்நாட்டில் கோடை வெயில் வரலாறு காணாத அளவில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இப்படியான வெயிலின் தாக்கத்தை தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கவே இல்லை. ஒன்றிரண்டு நகரங்களில் கொளுத்திக் கொண்டிருந்த வெயில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுட்டெரிக்க தொடங்கியிருக்கிறது. சராசரியாக அனைத்து மாவட்டங்களும் 100 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை எதிர்கொண்டிருக்கின்றன. இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கான வெயிலின் தாக்கம் ஆகும். இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இருப்பினும் இதில் இருந்து நிவாரணம் பெற வாய்ப்பு இல்லை என்றே வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகள் இருக்கின்றனர்.

மேலும் படிக்க | நயினார் நாகேந்திரன் ரூ. 4 கோடி வழக்கு... சிபிசிஐடிக்கு திடீர் மாற்றம்!

ஏப்ரல் 27 ஆம் தேதியான இன்றும் வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகமாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 29 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்ரல் 27 ஆம் தேதியான இன்று அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இயல்பை விட 2–4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" எனத் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பு மூலம் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வட மாநிலங்களில் பலர் வெப்ப பக்கவாதத்தால் (Heat Stroke) பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் பலர் இந்த பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்து, அடிக்கடி குளித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே வெப்பகால நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

மேலும் படிக்க | அடுத்த ஒரு வருஷத்திற்கு இந்த முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் - அதுவும் தி.நகரில்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News