மேகதாது விவகாரத்தில் எடப்பாடி தெரிந்த விஷயத்தை சொல்ல மறுக்கிறார் - முத்தரசன்

தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது என்பதை தெரிந்தும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசியலுக்காக திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக முத்தரசன் விமர்சித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 2, 2023, 07:41 PM IST
  • மேகதாது அணை கட்ட முடியாது
  • தமிழக அரசு அதனை அனுமதிக்காது
  • கர்நாடக காங்கிரஸூக்கு பொறுப்புணர்வு தேவை
மேகதாது விவகாரத்தில் எடப்பாடி தெரிந்த விஷயத்தை சொல்ல மறுக்கிறார் - முத்தரசன் title=

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்படும் என அம்மாநில துணை முதலமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை நிலைப்பாடு கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இது தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்கட்சிகள் ஆகியோர் கர்நாடக அரசின் நிலைப்பாட்டுக்கு தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதலமைச்சர் கூறியதற்கு திமுகவின் பதில் என்ன என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இது தொடர்பாக ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருப்பதுடன், அம்மாநில துணை முதலமைச்சருக்கு கடிதமும் எழுதியிருக்கிறார்.

இந்த விவகாரத்தை தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திமுக அரசு கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது கட்டப்படும் என்ற அம்மாநில அரசின் முழக்கத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், அம்மாநில துணை முதலமைச்சரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பான கேள்வி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசனிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது என்பதை தெரிந்தும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசியலுக்காக திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க | சிறையில் இருந்து வெளிவந்த 5 மணி நேரத்தில் சென்னையில் நடந்த கொலை: பின்னணி இதுதான்

இது தொடர்பாக அவர் பேசும்போது, எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி எதைப் பேச வேண்டுமோ அதை தான் பேசி வருகிறார். தமிழக அரசின் ஒப்புதல் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது. அரசியல் செய்து கொண்டிருக்கலாம் தவிர தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.  இதை அறிவிக்கிற அம்மாநில அமைச்சருக்கும் தெரியும். தமிழ்நாட்டின் எதிர்கட்சி தலைவருக்கும் தெரியும். தமிழக மக்களுக்கும் தெரியும். கர்நாடகா மக்களுக்கும் தெரியும்.

ஒரு போதும் அவ்வாறு கட்டுவது என்பது இயலாது. இப்படி ஒரு தவறான முயற்சிகளை கர்நாடகா எடுப்பது நல்லதல்ல. இந்த நேரத்தில் கர்நாடகா துணை முதலமைச்சர் பொறுப்போடு பேச வேண்டும். அவர் அரசியல் பொறுப்புணர்ந்து பேச வேண்டும். சிவக்குமார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு மேகதாது அணையை கட்டியே தீர்வேன் என கூறி வருகிறார். அதை எப்படி கட்ட முடியும். அரசியலுக்காக இதுபோன்று பேசி காலத்தையும் நேரத்தையும் வீணாக்க வேண்டாம். ஒருபோதும் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். அப்படியான முயற்சிகளை மேற்கொண்டால் தமிழகமே இதற்கு எதிர்த்து கிளம்பி எழும்

இதில் எடப்பாடியா.. ஸ்டாலினா என்பதல்ல பிரச்சனை. இதில் ஒட்டுமொத்த தமிழகமும் இந்த பிரச்சினையை எதிர்த்து நிற்கும். தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதை கர்நாடக அரசு மதித்து செயல்பட வேண்டும். தமிழகத்திற்கான பங்குகளை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News