வாட்ஸ்அப் சாட்களை எல்லாம் ஒரே PDF-க்கு மாற்றி சேமிக்க முடியுமா? எப்படி?

WhatsApp Chat Export: உங்கள் வாட்ஸ்அப்பில் இருக்கும் சாட்களை பிடிஆப் பைல்களாக மாற்றி சேமித்துக் கொள்ள முடியும். இதன் மூலம் உங்களுக்கு ஸ்டோரேஜ் பிரச்சனை வரவே வராது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 5, 2024, 02:17 PM IST
  • வாட்ஸ்அப் சாட்களை எக்ஸ்போர்ட் செய்யலாம்
  • இனி மீடியா பைல்களையும் பிடிஎப் பைலாக்கலாம்
  • எப்படி எக்ஸ்போர்ட் செய்வது என தெரிந்து கொள்ளுங்கள்
வாட்ஸ்அப் சாட்களை எல்லாம் ஒரே PDF-க்கு மாற்றி சேமிக்க முடியுமா? எப்படி?  title=

வாட்ஸ்அப் செயலியில் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான மெஜேசஜ்கள் எல்லாம் சிலருக்கு வந்து கொண்டே இருக்கின்றன. தினம்தோறும் தேவையில்லாத மெசேஜ்களை தேடிதேடி அழிப்பதே அவர்களுக்கு சிரமமான வேலையாக இருக்கும். அதற்கு இப்போது முடிவு கிடைத்துவிட்டது. இனி வாட்ஸ்அப் மெசேஜ்களை எல்லாம் எக்ஸ்போர்ட் செய்து பிடிஎப் பைல்களாக மாற்றிக் கொள்ளலாம். அது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கும், சார்ந்தவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

பலருக்கும் வாட்ஸ்அப் சாட் எக்ஸ்போர்ட் இருப்பது தெரியும். ஆனால் இப்போது அதில் வந்திருக்கும் அப்டேட் என்னவென்றால் நீங்கள் எக்ஸ்போர்ட் செய்யும் சாட்களை எல்லாம் மீடியா பைல்களுடன் எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம். அத்துடன் அவற்றை பிடிஎப் பைல்களாக மாற்றி சேமித்துக் கொள்ளலாம் என்பதுதான் இப்போது வந்திருக்கும் லேட்டஸ்ட் அப்டேட். ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டு மொபைல்களிலும் எப்படி பிடிஎப் பைல்களாக மாற்றி சேமிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | போட்டோக்களை மினுமினுக்க வைக்கும் இன்ஸ்டாகிராம் ஃபில்டர்ஸ்..! தெரிந்து கொள்ளுங்கள்

வாட்ஸ்அப் பைல்களை ஆண்ட்ராய்டு மொபைலில் பிடிஎப் பைல்களாகவும், ஐஓஎஸ் பயனர்கள் File.Zip பைல்களாகவும் சேமித்துக் கொள்ளலாம். டெஸ்க்டாப் வாட்ஸ்அப்பில் இந்த அம்சம் இருக்கிறது. ஆண்ட்ராய்டு பயனர்கள் இப்போது ஒரு வாட்ஸ்அப் சாட்டை கிளிக் செய்து அதன் கீழ் உள்ள ஒட்டுமொத்த மெசேஜ்களையும் எக்ஸ்போர்ட் (WhatsApp message PDF export) செய்ய முடியும். இப்படி ஒரு சாட்டை எக்ஸ்போர்ட் செய்யும் பொழுது, அந்த தனிப்பட்ட வாட்ஸ்அப் சாட்டின் கீழ் உள்ள அணைத்து டெக்ஸ்ட் மெசேஜ்கள் மற்றும் மீடியா பைல்கள் மற்றும் PDF பைலாக (PDF file) மாற்றப்படும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வீடியோ மற்றும் வாய்ஸ்கால் விபரங்கள் இடம்பெறாது.

நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் எக்ஸ்போர்ட் செய்ய விரும்பும் சாட்களுக்கு சென்று அங்கு ஸ்கிரீனில் மேல் வலது மூலையில் தென்படும் மூன்று கோடுகளை கிளிக் செய்து, அதில் காண்பிக்கும் எக்ஸ்போர்ட் சாட் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அப்போது பிடிஎப் வடிவில் சேமிக்க வேண்டுமா? என்று கேட்கும், அதற்கு ஓகே கொடுத்தால் வாட்ஸ்அப் சாட்கள் பிடிஎப் வடிவில் ஸ்டோரேஜ் ஆகும். 

மேலும் படிக்க | ஆதார் அட்டையை இலவசமாக மார்ச் 14 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News